நட்பின் இலக்கணம்

kavithai-nadpinillakanam

001]
வானத்தின் சொந்தம் விண்மீன்கள்
மலரின் சொந்தம் வண்டுகள்
காற்றின் சொந்தம் தென்றல்
நட்பின் சொந்தங்கள் நல்ல நினைவுகள்
…………………………………………………………………………………………………………

002]
உரிமை கொண்டாடும் உறவை விட,
உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

…………………………………………………………………………………………………………

003]

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள்.
புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
…………………………………………………………………………………………………………

004]
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.
…………………………………………………………………………………………………………

005]
என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ ‘நட்பு” மலர்கள் – ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும் …மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி………….தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை……….?
…………………………………………………………………………………………………………

006]
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது “நம் நட்பு’
…………………………………………………………………………………………………………

007]
மூன்று வ‌ருட‌ ந‌ட்பு தான் என்றாலும்20 வருடம் போல் ஆழ‌மான‌ ந‌ட்பு…ச‌ந்தோச‌த்தையும் சுக‌த்த‌யும் ச‌ரி விகித‌த்தில் க‌ல‌ந்து கொடுத்த‌வ‌ன்.. பிரிகிறேன் என்று சொன்ன‌ போது வேத‌னை என்னை ஆட் கொண்ட‌து…பிரியாதே என்றேன் முடியாது இது கால‌த்தின் க‌ட்டாய‌ம் என்றான்… ஆனால் என்னை விட‌ அரும‌யான‌ ந‌ண்ப‌ன் உன‌க்கு கிடைப்பான் என்றான்…வ‌ருத்த‌துட‌ன் விடை கொடுத்தேன்
…………………………………………………………………………………………………………

008]
நண்பனோ அல்லது நண்பியோ…
என்னை நீ புரிந்து கொண்டால்..என்னுடன் வந்து சேர்ந்துகொள்
இல்லையேல் பிரிந்து செல்…..ஏன் என்றால்….!
…நட்புக்கு பாலமாய் அமைவது புரிந்துணர்வு ஒன்றுதான்
…………………………………………………………………………………………………………

009]
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் ….. இது காதல்…!
இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்….! இது நட்பு….!
…………………………………………………………………………………………………………

010]
என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை …தடுக்க மாட்டேன்.. ஆனால், அவன்/அவள் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார். அங்கே உனக்காக நான் இருப்பேன்….!
…………………………………………………………………………………………………………

011]
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே…………..
…………………………………………………………………………………………………………

012]
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு,சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் உண்மையான நட்பு . . . !!
…………………………………………………………………………………………………………

013]
அழகு இருந்தால் வருவேன் என்றது காதல், பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம், எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது உண்மையான நட்பு…!!
…………………………………………………………………………………………………………

014]
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு…..தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம உண்டு….
…………………………………………………………………………………………………………

015]
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது
ஆனால் ஒரு நல்ல நன்பனின் மெளனம் இதயத்தில் அதிக துக்கத்தை ஏற்படுத்தும்..
…………………………………………………………………………………………………………