டாக்டர் நகைச்சுவை

001)
கணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. ?
மனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..

………………………………………………………………………………………

002)

நோயாளி: என்னோட கை ரொம்ப நடுங்குது டாக்டர்.
டாக்டர்: நீங்க நிறைய குடிப்பீங்களோ?
நபர்: எங்க டாக்டர், இந்த நடுக்கத்திலேயே பாதிக்கும் மேலே கொட்டிடுதே!

………………………………………………………………………………………

003)

வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?
டாக்டர்: 8:30 மணி இருக்கும்
வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?
டாக்டர் : இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

………………………………………………………………………………………

004)

இரவில் படுக்கும்போது கவலைகளை மறந்து
படுக்கணும்…!

என்ன டாக்டர் பண்றது…என் மனைவி தனியா
படுக்க பயப்படுறாளே…!

………………………………………………………………………………………

005)

எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட், ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வாங்கிட்டார்.
எங்க டாக்டர் ரொம்ப அட்வான்ஸ், ஆஸ்பத்திரி பின்னால் சுடுகாடே கட்டி விட்டார் என்றால் பார்துக்கேயேன்.

………………………………………………………………………………………

006)

ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?”
“நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!”

………………………………………………………………………………………

007)

நோயாளி : “டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது.”
டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் “எல்லாமே” முடிஞ்சுடுமே.”

………………………………………………………………………………………

008)

டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர் : அப்போ…., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?

………………………………………………………………………………………

009)

ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..

………………………………………………………………………………………

010)

*மருத்துவர்: உடம்புக்கு என்ன?*
*நோயாளி: எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கேன் டாக்டர்*
*மருத்துவர்: என்ன மொபைல் வச்ருகீங்க*
*நோயாளி: நோக்கியா 1100*
*மருத்துவர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தரேன். ஜியோ சிம் போடுங்க பேஸ் புக் வாட்ஸ் அப் இன்ஸ்டால் பண்ணுங்க. நிறைய குரூப்பில் சேருங்கஅப்புறம் எல்லாம் சரியாயிடும்*

………………………………………………………………………………………

011)

டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்

………………………………………………………………………………………

012)

டாக்டர் – ஏங்க நொண்டி நொண்டி வரீங்க?
நோயாளி – கால்ல அடி பட்டுடுங்க டாக்டர்
டாக்டர் – கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல?
நோயாளி – கால் வலியே தங்க முடியல இதுல தல வலி வேறையா

………………………………………………………………………………………

013)

டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்….

நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.”

………………………………………………………………………………………

014)

நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா…?”
”யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்… அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?”

………………………………………………………………………………………

015)

பெண்: “ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?”
டாக்டர்: “எதுக்கும்மா கேக்கறீங்க?”
பெண்: “பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு.”

………………………………………………………………………………………

016)

அவள்: டாக்டர்! என் கணவருக்கு வர வர ஞாபக மறதி கூடிக்கிட்டே போகுது?
டாக்டர்: ஏன் என்ன செய்யறார்?
அவள்: திடீர் திடீர்னு என்ன சமைக்கச் சொல்லி சாப்பாடும் போடச் சொல்றாரு.

………………………………………………………………………………………

017)

பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் ­ ­ கேட்கறீங்க….. ­ ­?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்க ­ ­ளே… அதான் கேட்டேன்.!”

………………………………………………………………………………………

018)

“நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் பொண்ணுங்களையேப் பார்த்துக்கிட்டு இருக்கேன் டாக்டர்..!”

“அதோட’சைட் எஃபெக்ட்’டா இருக்கும்..!”

………………………………………………………………………………………

019)

டாக்டர் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன்.

ஏன் பேஷண்ட் யாரும் வர்றதில்லையா?

இல்ல பேஷண்ட் யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்க…!

………………………………………………………………………………………

020)

இந்த ஆஸ்பத்திரிலே உள்ள டாக்டர் எங்க குடும்ப டாக்டர்!

நீ அனாதைன்னுதானே என்கிட்டே சொன்னே?

எங்க குடும்பத்தையே காலி பண்ணி நான் அனாதை ஆனதுக்குக் காரணம் இந்த டாக்டர்தான்!

………………………………………………………………………………………

021)

வலி தெரியாம பிடுங்குவேன்’னு சொன்னீங்க, ஆனா இப்ப ஒரே வலியா இருக்குதே டாக்டர்?

நான் வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னது
பீஸை!

………………………………………………………………………………………

022)

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!

மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

………………………………………………………………………………………

023)

இந்த இரண்டு விரல்ல ஒண்ணு தொடுங்க..!

எதுக்கு டாக்டர்?

உங்களுக்கு மருந்தை மாத்தணுமா…இல்ல நர்ஸை
மாத்தணுமான்னு முடிவு செய்யணும்…!

………………………………………………………………………………………

024)

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

………………………………………………………………………………………

025)

அய்யையோ… வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்!

யோவ்! ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது?

………………………………………………………………………………………

026)

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

………………………………………………………………………………………

027)

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

………………………………………………………………………………………

028)

டாக்டர், பயங்கர முதுகுவலி… என்ன பண்ணலாம்…?தைலம் அப்ளை பண்ணுங்க…
அப்படியும் வலி போகலேன்னா…?
லீவுக்கு அப்ளை பண்ணுங்க.

………………………………………………………………………………………

029)

டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?
அதனாலே என்ன ?
மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே… பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?

………………………………………………………………………………………

030)

டாக் டர்……………(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)……….. நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக என்னிடம் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன வருத்தம் என கூற முடியும்.
நோயாளி……….”ஆமா டாக் ட ர். நான் ரொம்ப நாளா உங்க Secretary கமலாவைக் காதலிக்கிறேன்.”
டாக் ட ர்………….?????????????????????

………………………………………………………………………………………

031)

“உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!” “அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?”

………………………………………………………………………………………

032)