—————————————————————————————————-
/ Page1 / Page 2 /
—————————————————————————————————-
[001]
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
—————————————————————————————-
[002]
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
—————————————————————————————-
[003]
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
—————————————————————————————-
[004]
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
—————————————————————————————-
[005]
பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
இப்பவாவது உணர்ந்தியே!
கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
—————————————————————————————-
[006]
உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
—————————————————————————————-
[007]
நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?
எப்படி ? உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.
—————————————————————————————-
[008]
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு … வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!”
—————————————————————————————-
[009]
“வக்கீல் சார்… வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது.”
“ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?”
—————————————————————————————-
[010]
எல்லோரும் வீட்டு வாசல்லதான் திருஷ்டிப் பொம்மை வைப்பாங்க, நீங்க பஸ்லேயே வெச்சிருக்கீங்க?
யோவ், அது என் பெண்டாட்டி போட்டோயா..!
—————————————————————————————-
[011]
எதிரி, நம்மை இன்னமும் துரத்திக் கொண்டு இருக்கிறான் மன்னா…!
மூச்சிரைக்கத் துரத்தி விட்டு, வாழில் நுரை தப்ப, கால்கள் சோர்ந்து தோற்றுத் திரும்பப் போகிறான் அவன்…
திரும்பிப்பார்க்காமல் நாம் ஓடுவோம்…!
—————————————————————————————-
[012]
மது ஒழிப்பு பிரச்சாரம் :மதுவை நாம் நாட்ல இருந்து அழிக்கணும் .,
So Daily நான் 2 full wisky குடிச்சு அழிகிறேன்.,
நீங்க Daily 3 Quarter குடிச்சு அழிச்சிடுங்க..
ஏதோ நம்மால முடிஞ்ச சமூக சேவை.
சரக்கு அடிப்போம் மதுவை ஒழிப்போம் ….
#தம்பி நமக்கு நோபல் பரிசு ஏதாவது கிடைக்கிறவாய்ப்பு இருக்கா ?
—————————————————————————————-
[013]
சுவாமி இந்த பூமி ஏன் சுற் றுகின்றது
மகனே கேள் ஒரு குவாட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலை கீ ழா நடக்கும் போது 3 குவாட்டர் தண்ணிய தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சு ற் றுவதில் என்ன அதிசயம் மகனே ??
சுவாமி குவாட்டர் கோவிந்தசாமி
—————————————————————————————-
[014]
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க….ஏதாவது?”
Friend 2 ”நாய் இருக்கு… அவுத்துவிடவா?”
#Nanbendaaaaaaaaaaaaa………..
—————————————————————————————-
[015]
வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்
1.காலை சாப்பாடு
2. மதிய சாப்பாடு
3.இரவு சாப்பாடு.
—————————————————————————————-
[016]
ஒவ்வொரு மனிதர்களுமே ஆச்சரியமானவர்கள் தான்….
உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்..
உங்களுக்கு ஒரு பெற்றோர், அதாவது இரண்டு பேர்….
அந்த இரண்டு பேருக்கும் அப்பா, அம்மா உண்டு…
அப்படியே போய்க்கொண்டிருந்தால்… ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட 500 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்றால் உங்களை உருவாக்கியவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா…………………………?
1,48,576 பேர். இந்த வரிசையில் ஏதாவது ஒரு ஜோடி மிஸ் பண்ணியிருந்தால் கூட நான் உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்”
—————————————————————————————-
[017]
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . . . . . .
—————————————————————————————-
[018]
காதலி : டார்லிங் இன்னைக்கு sunday வாங்க
ஹோட்டெல போய் சாப்பிட்டு வருவம்…ஆனால்
நான் தான் கார் ஓட்டுவேன் ….?
காதலன் : என்னோட தலைவிதி கார்ல போயிட்டு ஆம்புலன்சில வரோணும் எண்டு ….
—————————————————————————————-
[019]
டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
—————————————————————————————-
[020]
பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்க ளே… அதான் கேட்டேன்.!”
—————————————————————————————-
[021]
பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
ஆண்: ஆமா!
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….
ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?
பெண்: ச்சே ச்சே நோ நோ…!
ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
பெண்: _________________________________
—————————————————————————————-
[022]
“அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.” “எப்படி சொல்றீங்க?”
“வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.”
—————————————————————————————-
[023]
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை
—————————————————————————————-
[024]
பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தாஅவளுக்கு பாய் பிரெண்ட் இருக்கான்னுஅர்த்தம்..
பையன் மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் இல்லைன்னு அர்த்தம்…
—————————————————————————————-
[025]
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!
காதலி: ஆமாம் அன்பே..
காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
[026]
லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:
”இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.”
அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:
இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
—————————————————————————————-
[027]
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,”ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.”
—————————————————————————————-
[028]
தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?
முழிச்சிருப்பாங்க
—————————————————————————————-
[029]
ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு… இப்ப நான் சாப்பிடப் போறேன்… பார்த்துட்டுப் போய்டு
—————————————————————————————-
[030]
நீதிபதி : உன்னை மாதிரி ஆளுங்களாலே இந்தச் சமுதாயத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை.
குற்றவாளி : இப்படி சொல்லிட்டீங்களே,ஐயா!! என்னை மாதிரி ஆளுங்களாலேதான் இங்க இருக்கும் ஏட்டய்யா, வக்கீலுங்க, இந்தக் கோர்ட்டில் இருக்கும் எல்லோருக்கும், ஏன் உங்களுக்குக் கூட வேலை கிடைச்சிருக்கு.
—————————————————————————————-
[031]
நம்ம அப்பா முட்டாளாம்மா?”
“எதுக்குடா இப்படி கேகிறே?”
“எங்க வாத்தியார் என்னை
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே”
—————————————————————————————-
[032]
அப்பா : என்னடா உங்க அம்மா இன்னைக்கி ரொம்ப அமைதியா
இருக்குறா..?
மகன் : அது ஒன்னுமில்ல Dad.. அம்மா Lipstick கேட்டாங்களா.. நா தெரியாம Fevistick எடுத்து குடுத்துட்டேன் அதான்.
அப்பா : Ohhh… Sweeettt My Son.
—————————————————————————————-
[033]
நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு” “எப்படி சொல்றே?” “விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு..”
—————————————————————————————-
[034]
—————————————————————————————-
[035]
—————————————————————————————-
[036]
—————————————————————————————-
[037]
—————————————————————————————-
[038]
சாமி தலையில் இருந்த தங்கக் கிரீடத்தை திருடினியா ?
ஆமாம் சார், சாமிக்கு மொட்டைப் போடறதா வேண்டிக்கிட்டேன்!!
—————————————————————————————-
[039]
முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…
–
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
—————————————————————————————-
[040]
பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.
“இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?”
“ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்”
“இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது.”
—————————————————————————————-
[041]
அலுவலகத்தில் மேனேஜரின் டேபிளில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது…
உதவியாளர் : ஸார்… உங்க மனைவிகிட்டேயிருந்து போன்…
மேலாளர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்…? நீயே அட்டென்ட் பண்ணி, ‘ம்…ம்…ம்…ம்…’னு செல்லிடு!
—————————————————————————————-
[042]
யாராவது உன்னை லூசுன்னு சொன்னா கூலா இரு. அல்லது குரங்குனு சொன்னா கூட ரிலாக்ஸா இரு. ஆனா நீ அழகா மட்டும் இருக்கேன்னு சொன்னா அவனை தூக்கி போட்டு நல்லா மிதி…….
மவனே பொய்யெல்லாம் வேலைக்கு ஆவாதுல்ல ….
—————————————————————————————-
[043]
கடத்தல் காரன் : ஹலோ, உங்க கணவரை நாங்கதான் கடத்தி வெச்சிருக்கோம்……… நீங்க பத்து லட்ச ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவோம்!
மனைவி : கொஞ்ச நேரம் கழிச்சு அவர் இம்சை தாங்க முடியாம ‘சனியன் தொலையட்டும்’ னு நீங்களே விடப் போறீங்க.பாருங்க!
—————————————————————————————-
[044]
சதீஷ் : தம்பி.. மது பழக்கம் கூடாது..!
சந்தோஷ் : அப்படியே அய்யா..!
சதீஷ் : மாது சிந்தனை கூடவே கூடாது..!
சந்தோஷ் : அப்படியே அய்யா..!
சதீஷ் : மாமிசம் ஆகாது…!
சந்தோஷ் : அப்படியே அய்யா..!
சதீஷ் : சூது ஆகவே ஆகாது..!
சந்தோஷ் : அப்படியே அய்யா..!
சதீஷ் : நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..!
சந்தோஷ் : அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?
—————————————————————————————-
[045]
மாப்பிள்ளைக்கு காது கேட்காதுங்கற விஷயம் பொண்ணு பார்க்கிற அன்னிக்கே தெரிஞ்சு போச்சு…!
எப்படி?
பொண்ணு கொட்டாவி விட்டதைப் பார்த்துட்டு,‘நல்லா பாடறாளே’ன்னு சொல்லிட்டாரு…!
—————————————————————————————-
[046]
குகைக்குள்ளிருந்து பரபரப்புடன் தன் கணவரை நோக்கி ஓடி வந்தாள் அந்த ஆதிவாசிப் பெண்.
“ஆபத்து! என் அம்மா தங்கியிருக்கும் குகைக்குள் ஒரு புலி வந்து விட்டது. காப்பாற்றுங்கள்” என்று அலறினாள்.
அவள் கணவன், “நான் என்ன செய்ய முடியும்? புலிக்கு அதிர்ஷ்டமிருந்தால் தப்பிப் பிழைக்கட்டும்” என்றான் அமைதியாக
—————————————————————————————-
[047]
ஓர் ஆள்.
தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் கிட்டே யோசனை கேட்டான்:
”வரப்போகிற மனைவி சிவப்பா இருக்கணும்… நான் ஏதாவது சொன்னா அதைச் செய்யணும்.
துணிமணிகளையெல்லாம் சுத்தமா துவைக்கணும்… அப்படிப்பட்ட மனைவி தேவை…!”
கம்ப்யூட்டர் உடனே பதில் தந்தது:
”சிவப்பு கலர்லே ஒரு வாஷிங் மிஷினை கல்யாணம் பண்ணிக்கோ!”
—————————————————————————————-
[048]
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
******************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனுசூள் கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு மார்க்கோட
”ஷேரிங்”.
#அந்த 5-வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா?
அட இப்போ லைக் போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க
—————————————————————————————-
[049]
“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”
“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
—————————————————————————————-
[050]
அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்குஎடுத்ததா?
இல்லை. எனக்கு எடுத்தது…!
—————————————————————————————-
[051]
என்னது நாராயணசாமி சார் ஹாஸ்பிட்டல்ல இருக்காரா? ஆச்சர்யமா இருக்கே!! நேத்து ஒரு பொண்ணு கூட போனதை பார்த்தனே!!!
அதான்… அதை அவர் மனைவியும் பார்த்திட்டாங்களாம்!!
—————————————————————————————-
[052]
எனக்கு நாக்குல புண் வந்திருக்குன்னு நான் சொல்லாமலே என் மனைவி கண்டு பிடிச்சிட்டா…!
எப்படி..?
அது தெரியலை… ஆனா என்னை கரெக்டா ‘புண்ணாக்கு… புண்ணாக்கு’னு கூப்பிடறாளே..!
—————————————————————————————-
[053]
—————————————————————————————-
[054]
அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
—————————————————————————————-
[055]
நாராயணசாமி: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
நாராயணசாமி: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
—————————————————————————————-
[056]
டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
—————————————————————————————-
[057]
—————————————————————————————-
[058]
என் மகன் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி பிஸ்கட் பிஸ்கட்னு கேட்டுக்கிட்டு இருப்பான்..!
இப்போ?
பீஸ் கட்டு பீஸ் கட்டுனு கேட்கிறான்..!
—————————————————————————————-
[059]
“தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர் மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க.
தமிழ் டீச்சர் “உதவி உதவி” னு கத்துறாங்க…
இங்கிலீஷ் டீச்சர் “ஹெல்ப் ஹெல்ப்” னு கத்துறாங்க…
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
119 … 119
—————————————————————————————-
[060]
—————————————————————————————-
[061]
ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
—————————————————————————————-
[062]
—————————————————————————————-
[063]
கண்டிப்பாக எல்லோரும் LOVE பண்ணுங்க….
ஏன்னா……..?
சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லை.!!!
—————————————————————————————-
[064]
—————————————————————————————-
[065]
—————————————————————————————-
[066]
—————————————————————————————-
[067]
போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!
ம்ம்… எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கிறது! மாமியாரும் இருக்குறாங்க! … அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்….
அட… எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே!?…
—————————————————————————————-
[068]
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
—————————————————————————————-
[069]
—————————————————————————————-
[070]
என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?
அதுவா… குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!
அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?
என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?…
—————————————————————————————-
[071]
மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை தலைக்கு பின்னால இருக்குற வழுக்கையைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!
—————————————————————————————-
[072]
உங்களுக்குதான் ஓட்டு கிடையாதுன்னு சொன்னோமே… அப்புறமும் எதுக்கு நின்னுக்கிட்டே இருக்கீங்க?
கை நீட்டிப் பணம் வாங்கிட்டேன். அதுக்கு ஒரு கள்ள ஓட்டாவது போட்டுட்டுப் போயிடுறேனே..!
—————————————————————————————-
[073]
—————————————————————————————-
[074]
நாராயணசாமி வீட்ல ஆயிரக்கணக்குல செருப்புகள் இருந்ததுக்கு, அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே… தலைவர் என்ன சொன்னார் ?
வாங்கினா கணக்கு காட்டலாம். மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னாராம்.. !
—————————————————————————————-
[075]
ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப
ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.
அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது, இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!
அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்
‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்’!!
—————————————————————————————-
[076]
அமெரிக்கன்:- நாம தான் முதன்முதலாக விண்வெளிக்குப் போனோம்..
ரஸ்சியன் :- நாம தான் முதன்முதலாக நிலவுக்குப் போனோம்..
நம்மாளு :- நாம தான் முதன்முதலாக சூரியனுக்குப் போனோம்..
அமெரிக்கன்:- பொய் சொல்லாதடா, சூரியனுக்கு கிட்டப் போனாலே எரிஞ்சிடுவாய்..!
நம்மாளு :- போடா மடையா, நாங்க போனது இரவில்…!! (விடுவமா நாங்க..?)
—————————————————————————————-
[077]
டேய் மச்சான்… இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா”
“டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க… நான் உன் ஃப்ரண்டு இல்லடா…
உன் அப்பன்”
—————————————————————————————-
[078]
அம்மா: ஏன்டா அப்பா பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்குற
மகன்: அப்பா தான் என் பெயர் கெட்டுடாம பார்த்துக்கோன்னு சொன்னாருமா
—————————————————————————————-
[079]
Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ?
Student: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க!
Teacher: டே உன் கிட்ட 2 இட்லி இருக்குனு வச்சிக்கோ.
நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?
Student: சட்னி.
Teacher: ???
—————————————————————————————-
[080]
—————————————————————————————-
[081]
இன்றைய சிந்தனைக்கு…
ஒரு பொண்ணுகிட்ட I LOVE U சொன்னா அது முயற்சி ..
இதையே ..
பல பொண்ணுங்க கிட்ட சொன்னா அது பயிற்சி …
practice makes mans perfect..::)
—————————————————————————————-
[082]
ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
ஓட்டுனர் திடிரென பிரேக் போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மீது விழுந்து, முத்தமும் கொடுத்து விடுகிறான்.
கேர்ள்: டேய்! என்ன பண்ற?
பையன்: B.E. 2nd இயர் … நீ?
நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்புதான் தெரியும்.
—————————————————————————————-
[083]
பசங்க கல்யாணத்துக்கு முன்னாடி நினைச்சப்போ சரக்கு அடிக்கலாம்..
பொண்ணுக கல்யாணதுக்கு பின்னாடி நினைச்சப்போ புருசனை அடிக்கலாம்.
—————————————————————————————-
[084]
காதலன் தன் காதலிக்கு பிறந்தநாள் பரிசாக முயல் ஒன்றை பரிசாக தந்தான் அடுத்த நாள் காலை
காதலன்:நான் கொடுத்த பரிசு எப்படி இருந்தது
காதலி:ம்ம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சு:P
—————————————————————————————-
[085]
ஒரு மளிகை கடையில்
வாடிக்கையாளர்: “மல்லி இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “பூண்டு இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “இஞ்சியாவது இருக்கா?”
கடைக்காரர்: “இல்லை”
வாடிக்கையாளர்: “பூட்டு சாவி இருக்கா?”
கடைக்காரர்: “ஓ!! இருக்கே!!”
வாடிக்கையாளர்: “அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா”
—————————————————————————————-
[086]
வீட்டில் இரு நண்பர்கள்:
என்னடா… போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?
ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்..
புரியலை’
என் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்..
—————————————————————————————-
[087]
அமெரிக்க டாலரோட மதிப்பு ஒரு டாலருக்கு 55க்கு மேல போயிருச்சு…
பால் விலையும் 40 ரூபா வர வந்துருச்சு…
பெட்ரோல் விலையும் 70 ரூபாவுக்கு மேல போயிருச்சு…
இந்த இக்கட்டான நிலையிலும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்…
பரீட்சையில் பாஸ் மார்க்கை இன்னும் 35ன்னுதானே !!! ?
—————————————————————————————-
[088]
“உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?”
“”காலையிலே ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்”
“அப்போ நைட்டு?”
“கழட்டி ஆணியிலே மாட்டிடுவேன்”
—————————————————————————————-
[089]
நைட்லாம் தூக்கமே வரமாடுக்குது!
ஒரு சின்ன விஷயம் என்னை பாடாய் படுத்துகிறது!
அது எனக்குள்ள எப்படி வந்துசுண்டே தெரியல!
அது ஒரு வித்தியாசமான வலி!
என்னை போட்டு அப்படியே பொறட்டுது!
# கொசுக்கடி தாங்கமுடியலப்பா!!!!!!!
—————————————————————————————-
[090]
“ஏண்டி…. எங்கம்மாவை ‘அரை லூஸு’ னு திட்டினியாமே, அப்படியா..?
‘ஸாரிங்க… அவங்களை முழுசா புரிஞ்சிக்காம அப்படிப் பேசிட்டேன்’
—————————————————————————————-
[091]
ஒரு வாசகர் கதையாசிரியருக்கு எழுதிய மடல்…!!
——————————
“எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டே இருந்த என் வீட்டு மேஜையின் காலின் கீழ் புத்தகத்தை
வைத்தேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது முப்பது வருடமாக ஆ(ட்)டிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது. இன்னும் இது மாதிரி பல உபயோகமான புத்தகங்களை எழுதுங்கள்.”
—————————————————————————————-
[092]
எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?
அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.
—————————————————————————————-
[093]
தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?
ஏன் இப்ப என்னாச்சு ?
கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.
—————————————————————————————-
[094]
எதுக்குங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வரதட்சணைப் பணத்தை கேட்குறீங்க?
அப்பதானே மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுக்க முடியும்…!
—————————————————————————————-
[095]
மாப்பிள்ளைக்கு கவர்மென்ட் வேலை கிடையாதா?
போலீஸ், கோர்ட்னு கவர்ன்மென்டுக்கே வேலை கொடுக்கிறாரே…!
—————————————————————————————-
[096]
நர்ஸோட இதயத்தைத் திருடலாம்னு நினைச்சு அந்த ஆஸ்பத்திரியில பேஷண்ட் மாதிரி அட்மிட் ஆனது தப்பாப் போச்சு..!
ஏன் என்ன ஆச்சு?
டாக்டர் என் கிட்னியைத் திருடிட்டடார்..!
—————————————————————————————-
[097]
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
—————————————————————————————-
[098]
—————————————————————————————-
[099]
“எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி…”
“எப்படி…?”
“அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!”
—————————————————————————————-
[100]
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது.
அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த எலி கேட்டது.
எதுக்கு அவனைக் கொன்னேனு…
புலி : அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.
—————————————————————————————-
—————————————————————————————————-
/ Page1 / Page 2 /
—————————————————————————————————-
Recent Comments