கணவன் & மனைவி நகைச்சுவை

[001]

மனைவி:= ராத்திரி தூக்கதுல ஏன் சிரிச்சிங்க..?
கணவன்:= கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி:= அப்புறம் ஏன் கத்துனீங்க..?
கணவன்:= நடுவுல நீ வந்துட்ட

—————————————————————————————-

[002]

கணவனும் மனைவியும் பயங்கர சண்டை. அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை.. மனைவியால பொறுக்க முடியல. கணவன் கிட்ட வந்தாங்க. இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை. ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து
ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.

கணவன்: ரொம்ப நல்லது. என்ன செய்யலாம் சொல்லு…?
மனைவி:
நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..,
நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்..

—————————————————————————————-

[003]

நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?

எப்படி ?   உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.

—————————————————————————————-

[004]

உன்னை கட்டிகிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டியிருக்கலாம்!
நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க நான் எப்பவோ செஞ்சிட்டேன்!

—————————————————————————————-

[005]

*70 வயசு பெரியவர் தன்னோட மனைவியை இன்னமும் ‘Darling’. ‘Honey’. ‘Sweet heart’ன்னு கூப்ட்டுக்கிட்டிருந்தாரு.*
*அத பாத்து நான் அவரு கிட்ட கேட்டேன்….. “ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொண்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுறீங்க..??”*
*”தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு! அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு!”*

—————————————————————————————-

[006]

முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.

முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.”குரங்கு என்ன சாப்பிடும்?”என்று கேட்டார்.

மனைவி,”நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.”என்று பதில் கூறினார்.

”அது எங்கே தூங்கப் போகிறது?”என்று அவர் கேட்க,

மனைவி,”நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.”என்றார்.

முல்லா கோபமுடன்,”நம் படுக்கையிலா?நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?”என்று கேட்டார்.

அவர் மனைவி அமைதியாக சொன்னார்,”என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால், குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.”

—————————————————————————————-

[007]

கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டிருந்த மனைவி சோகமாகச் சொன்னாள் கணவனைப் பார்த்து, “நான் எவ்வளவு அசிங்கமாயிட்டேன், எனக்கே என்னைப் பார்க்கப் பிடிக்கல்லை, என் மனசுக்கு ஆறுதலா ஏதாவது சொல்லுங்களேன்”
அவன் சொன்னான், “அடே! உன் கண்பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கு!”

—————————————————————————————-

[008]

கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்…?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்…..

—————————————————————————————-

[009]

அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.
மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?
அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.

—————————————————————————————-

[010]

அந்தக் கிணற்றில் சென்று வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்ததெல்லாம் நடக்குமாம். முதலில் கணவன் சென்று வேண்டிக்கொண்டான். பிறகு மனைவி சென்றாள். ‘தொப்’ என்று சத்தம் கேட்டது. திரும்பவே இல்லை. கணவன் நினைத்துக் கொண்டான். “அப்பாடா, நான் வேண்டிக்கொண்டது நிஜமாகவே நடந்து விட்டது!”

—————————————————————————————-

[011]

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

—————————————————————————————-

[012]

உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

—————————————————————————————-

[013]

”உங்க வீட்ல யாரோட கை ஓங்கி இருக்கும்? உன் கையா? உன் மனைவி கையா?”
”என் மனைவி கை எப்பவும் ஓங்கி இருக்கும். என் தலை வீங்கி இருக்கும்.”

—————————————————————————————-

[014]

புலம்பல்
கணவன்:- நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!
மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!

—————————————————————————————-

[015]

மனைவி : சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..
.
போலீஸ் : உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?
.
மனைவி : தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.
.
போலீஸ் : ?????

—————————————————————————————-

[016]

கணவன் : உலகத்துல் ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!
மனைவி : ஆமாம் அதுக்கென்ன இப்போ..?
இல்ல!…. மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு…. பார்க்கலாம்னு ஆசை..!(அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே யூகியுங்கள் )

—————————————————————————————-

[017]

மேடம்… ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க…
எதுக்கு டாக்டர் ?
தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்… நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறா

—————————————————————————————-

[018]

அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா…
கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு….

—————————————————————————————-

[019]

ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..

கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..

ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…

இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…

என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்..

—————————————————————————————-

[020]

மனைவி : டார்லிங் இன்னைக்கு sunday வாங்க
ஹோட்டெல போய் சாப்பிட்டு வருவம்…ஆனால்
நான் தான் கார் ஓட்டுவேன் ….?
காதலன் : என்னோட தலைவிதி கார்ல போயிட்டு ஆம்புலன்சில வரோணும் எண்டு ….

—————————————————————————————-

[021]

மனைவி : ஏங்க! சமையல்கட்டிலேருந்து கொஞ்சம் உப்பு கொண்டு வரீங்களா?

சமையலறைக்குச் சென்ற கணவன் : உப்பு இங்க இல்லியே!

மனைவி : நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். அதனாலதான் நான் கையோட கொண்டு வந்துட்டேன்.

—————————————————————————————-

[022]

மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?

கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?

மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
*
*

கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

—————————————————————————————-

[023]

சம்பள முத்தம் …!
கணவன் :டார்லிங் இந்த மாத சம்பளத்துக்கு பதிலாக
500 முத்தங்கள் தர நினைக்கிறேன்-நீ என்ன நினைக்கிரே …?

மனைவி :தாராளமா தாங்க ஒரு பிரச்சனையும் இல்ல -நானும் அப்படியே பால் காரனுக்கு 100 முத்தம் பேப்பர் காரனுக்கு 100 முத்தம் கடைக்காரனுக்கு 200 முத்தம் ரீலோட் காரனுக்கு 100முத்தம் கொடுக்கவா டார்லிங் ..?

—————————————————————————————-

[024]

கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.

மனைவி: என்ன நல்லது?

கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.

—————————————————————————————-

[025]

மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!

—————————————————————————————-

[026]

மனைவி: உங்க கிரெடிட் கார்ட் திருடு போனதுக்கு நீங்க ஏன் புகாரே செய்யலை?

கணவன்: திருடன் உன்னை விட கம்மியாதான் செலவு செய்யறான். அதனாலதான்

—————————————————————————————-

[027]

கணவன் மனைவி இருவரும் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். இலைகளால் ஆன ஆடை அணிந்த ஒரு பெண்ணின் படத்திற்கு “வசந்த காலம்” என்று தலைப்புக் கொடுத்திருந்தனர்.

அந்தப்படத்தின் அருகே வெகுநேரம் நின்று கொண்டிருந்த கணவரைப் பார்த்து எரிச்சலோடு மனைவி சொன்னாள்.

“நீங்க எவ்வளவு நின்றாலும் இலையுதிர் காலம் வராது, வாங்க போகலாம்”

—————————————————————————————-

[028]

கணவன்: ஏண்டி… பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?

மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?

கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு… அதான் கேட்டேன்.

—————————————————————————————-

[029]

கொட்டாவி.
திருமணமானவன்,வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம் !

—————————————————————————————-

[030]

கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.

மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.

கணவன்: எப்படி?

மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே… இது ஒண்ணு போதாதா?

—————————————————————————————-

[031]

மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, கிச்சனுக்கு போய், புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!

மனைவி -”Hello Darling”

கணவன் : “அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு ?

—————————————————————————————-

[032]

“எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் …”

“எப்படி..?”

“நான் “சுடு தண்ணி”ன்னு சொல்றேன்; அவ அதை “காபி”ன்னு சொல்றா..!”

—————————————————————————————-

[033]

கணவன் : கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு
நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ,
இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.
மனைவி : நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச் சிட்டீங்களே

—————————————————————————————-

[034]

மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.

கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.

—————————————————————————————-

[035]

மனைவி : என்னங்க…உங்க கைக்கடிகாரம் ஓடாம நின்னு போய்  இருக்கு.

கணவன் : நேரத்தை வீணாக்க கூடாதுன்னு நான்தான் நிறுத்தி  வைச்சேன்.

—————————————————————————————-

[036]

கணவன்  : (அதிகாலை – படுக்கை அறையில்) “எந்த நாய் இந்தக் கருங்குரங்கு ஃபோட்டோவை இங்கே மாட்டினது?”
மனைவி :  (சமையல்கட்டில்) “தூக்கத்திலே உளறாதீங்க, அது கண்ணாடி”

—————————————————————————————-

[037]

கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?

மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.

—————————————————————————————-

[038]

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?

—————————————————————————————-

[039]

கணவன்: ஆபிரேஷன்ல நான் இறந்து போயிட்டா…  நீ அந்த டாக்டரையே
கல்யாணம் பண்ணிக்கோ
மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
கணவன்: பின்னே… டாக்டரை நான்  எப்படிப் பழிவாங்குறது?

—————————————————————————————-

[040]

மனைவி:- நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்

—————————————————————————————-

[041]