பேச்சு நகைச்சுவை-Page 2

—————————————————————————————————-
| Page1 | Page 2 |
—————————————————————————————————-

[101]

வேட்டைக்காரர்: ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.

நண்பர்: ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?

வேட்டைக்காரர்: எப்படி இருக்கும்? எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!

—————————————————————————————-

[102]
பெண்களிடம் நல்ல பெயர் வாங்க ஆண்களுக்கு சில ஐடியாக்கள்…

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை.
எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே.
இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே
உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட
புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான்
இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப்
பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா
வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்கஃ பிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி
வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும்.
சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது. இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில
தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

—————————————————————————————-

[103]

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு….

“ஏண்டா மச்சி … எப்படி இருக்க? ரொம்ப நாளா போன் பண்ணவே
இல்லை?” கேட்டேன் நான்.

“ஒண்ணும் இல்லைடா … பேலன்ஸ் இல்லைடா!”

“அட கூறுகெட்டவனே …பேலன்ஸ் இல்லைன்னா என்னடா … தூண்லயோ இல்லை குட்டி சுவத்துலயோ சாய்ஞ்சுகிட்டு பேச வேண்டியதுதானே!”

#”டமார்”னு சத்தம் கேட்டுச்சி … போனை உடைச்சிட்டான் போலிருக்கு!!!

 

—————————————————————————————-

[104]

ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;

நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு.
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு.
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
.
.

எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்..!

தவறேதும் இல்லையே.!! ஆருகிட்ட

 

—————————————————————————————-

[105]

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

—————————————————————————————-

[106]

ஆண்: நீங்க போட்டிருக்குற சென்ட்டு நல்ல வாசமா இருக்கு … எங்க வாங்கினீங்க ?
பெண்: எதுக்குக் கேக்குறீங்க…?
ஆண்: என் மனைவிக்கும் வாங்கிக் குடுக்கலான்னு தான்….
பெண்: வேணாம்…. விட்டுருங்க….
ஆண்: ஏன்?
பெண்: நீங்க பாட்டுக்கு வாங்கிக் குடுத்துருவீங்க… ஒங்கள மாதிரி எவனாவது ஒரு கிறுக்கன் வந்து இந்தே மாதிரிப் பேச்சுக் குடுப்பான்… எதுக்கு ரிஸ்க்கு?

—————————————————————————————-

[107]

காதலன் : டார்லிங் நாம இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா ?
காதலி : வேணாம்
காதலன் : ஏன் ?
காதலி : உன் மோதிரம் ரெண்டு கிராம். என் மோதிரம் எட்டு கிராம்.

—————————————————————————————-

[108]

யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
*அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

—————————————————————————————-

[109]

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்…
*வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

—————————————————————————————-

[110]

ஏம்மா கைக்குழந்தையை எடுத்துக்கிட்டு கச்சேரி
கேட்க வந்திருக்கே?

வீட்டுல தூங்க மாட்டேங்குது! பாகவதர் கச்சேரி
கேட்டாவது தூங்கட்டுமேன்னுதான்..!

—————————————————————————————-

[111]

காலண்டர் மாத்த போனப்பதான் .மனுசி சொன்னது விளங்கிச்சு ..
இத்தனை காலம் இருந்து என்னத்த கிழிச்சீங்கள் எண்டு ..
மறக்காம நான் கலண்டர் கிழிகிறத அவ மறந்துபோன போல ..

—————————————————————————————-

[112]

காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்.

—————————————————————————————-

[113]

பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”

—————————————————————————————-

[114]

நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே…?
நடிகை: அதெல்லாமில்லீங்க… இது ‘கரைஞ்சதும்’ வேற புது சோப் வாங்கிடுவேன்…!

—————————————————————————————-

[115]

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன
பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்…

—————————————————————————————-

[116]

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

—————————————————————————————-

[117]

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன்
சார்..
ஆசிரியர்: முட்டாள்…பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..

—————————————————————————————-

[118]

அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.”
“எப்படி சொல்றீங்க?”
“வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.”

—————————————————————————————-

[119]

சார்… என் பேரு கந்தசாமி…. சொந்த ஊரு பழனி…
அதுக்கென்ன இப்போ..
ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.

—————————————————————————————-

[120]

எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?
மாமி : இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா.

—————————————————————————————-

[121]

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
அதெப்படி?
மழையே பெய்யவில்லையே!

—————————————————————————————-

[122]

மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க

—————————————————————————————-

[123]

சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்

—————————————————————————————-

[124]

வக்கீல் : மை லார்ட் . . . என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.
கட்சிக்காரர் : (சத்தமாக) யோவ் வக்கீல் . . . என்ன விளையாடறியா? காசு வாங்கிக்கிட்டு என்னைப் பத்தி சொல்லுய்யான்னா . . . வேற யாரைப் பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே . . . தொலைச்சிடுவேன் தொலைச்சி

—————————————————————————————-

[125]

நாய் கடிக்கு என்ன பண்ணனும்?
முதல்ல நாய்கிட்ட போய் உங்க காலை காட்டண்ணும்!

—————————————————————————————-

[126]

சொந்த ஊர் எது? ….
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க…. சொந்த வீடுதான் இருக்கு!

—————————————————————————————-

[127]

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்…

சாமியின் background voice .. “வரம் கேக்குற உனக்கே இத்தன அடப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்..

—————————————————————————————-

[128]

 

அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெசின் கண்டு பிடி ச்சிருக்காங்க .

அந்த மெசின் இங்கிலாந்து ல 30 நிமிசத்துல 70 திருடர்கள கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிசத்துல 150 திருடர்களை கண்டு பிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிசத்துல

*
*
அந்த மெசினையே காணோம் !

## யாருக்கிட்ட .நாங்கெல்லாம் அப்பவே அப்படி !

 

 

 

—————————————————————————————————-
| Page1 | Page 2 |
—————————————————————————————————-