வாழைப்பூ – தண்டின் மருத்துவ குணங்கள்

வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. ஆம் தற்போது நாம் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம். வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன.
ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.
வாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும்.
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது.
Recent Comments