நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?

ஒரு பெரிய பத்திரிக்கையாளர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை குணமாகவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, “நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?” என்றார். அதிர்ச்சி அடைந்த கணவன், “உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?” என்றார். மனைவி சொன்னாள்: எனக்கொன்றும் இல்லை. உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஓடி, கரடி மாதிரி கத்திகிட்டே அங்க இங்கன்னு மாடு மாதிரி திரியறீங்க. இரவு வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குறைக்கிறீங்க. சும்மாருக்க நேரத்துல கூட மீன் கொத்தி மாதிரி பேப்பர படிக்கிறது, போன கையில பிடிச்சுகிட்டு கழுகு மாதிரி வட்டம் போடுறது, பூனை விட்டத்துல அங்கயும் இங்கயும் பாயுறாப்ல சேனல் சேனலா மாத்தி நியூஸ் பாக்குறதுன்னு இருக்கீங்க. அப்புறம் முதலை மாதிரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க.
அதனால தான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர் தான் குணப்படுத்த முடியும்.” என்ன சொல்வதென்று கணவன் முழிக்க, “என்ன ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க?” என்று முத்தாய்ப்புடன் முடித்தாள் மனைவி
Recent Comments