காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி

வெளியில் உள்ள வெப்ப அளவை விட காருக்குள் சுமார் 50 டிகிரி வரை அதிக வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் காரில் ஏறியதும் முதலில் ஏசியை ஆன் செய்யாமல் அனைத்து கண்ணாடிகளையும் இறக்கிவிட்டு விட்டு முதல் ஒரு நிமிடம் ஏசியை போடாமல் பயணம் செய்யுங்கள் இதனால் வெளியில் உள்ள வெப்பத்தின் அளவும் காருக்கு உள்ளே உள்ள வெப்பத்தின் அளவும் ஒரே சீராக நிலைக்கு வரும்.
அதன் பின் ஜன்னல்களை அடைத்து விட்டு ஏ.சி.யை ஆன் செய்யுங்கள் என்னதான் நீங்கள் வெளிக்காற்றை உங்கள் காருக்கள் விட்டாலும் வெளியில் உள்ள வெப்பத்தை விட உள்ளே அதிக அளவு வெப்பம் தான் இருக்கும். உதாரணமாக வெளியில் 100 டிகிரி வெப்பம் இருந்தால் காருக்குள் 150 டிகிரி வெப்பம் இருக்கும். இதை நினைவில்வைத்து கொள்ளுங்கள்.
கார்களில் பொருப்பட்டுள்ள ஏசி அதிகமாக வைக்கப்பட்டால் அது காருக்குள் இருக்கும் காற்றையே உள்ளே இழுத்து குளிர்வித்து வெளியே அனுப்பும். ஆனால் குறைந்த அளவில் இருந்தால் வெளியில் உள்ள காற்றை இழுத்து குளிர்வித்து உள்ளே அனுப்பும் அதனால் உங்களுக்கு விரைவாக குளிர் கிடைக்க வேண்டும் என்றால் ஏ.சி.யை அதிகமாக வைக்க கூடாது.ஏன் என்றால் தற்போது நீங்கள் காருக்குள் 70 டிகரி வெப்பத்தை கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள் என எடுத்து கொள்வோம். அதில் உள்ளே காற்றேயே குளர்விக்கும் முறையை ஏ.சி. கையாண்டால் முன்னார் சொன்னது போல் காருக்குள் இருக்கும் 150 டிகரி வெப்பம் உள்ள காற்றை 70 டிகிரியாக மாற்ற வேண்டும் அப்பொழுது ஏ.சி. காற்றில் உள்ள 80 டிகிரி வெப்பத்தை குளிர்விக்க வேண்டும்.
அதே நேரத்தில் வெளியில் உள்ள காற்றை குளிர்வித்தால் வெளியில் உள்ள 100 டிகரி வெப்பத்தை தான் 70 டிகிரியாக குளிர்விக்க வேண்டும் அதாவது 30 டிகிரி குளிர்வித்தால் போதும். அதனால் வெளியில் இருந்து காற்றை எடுப்பது தான் காரை விரைவாக குளிர்விக்கும் அதனால் காரில் ஏ.சி. யை அதிகபட்ச குளிரில் வைக்காதீர்கள்.
அதன் பின் உங்கள் காருக்கு போதுமான குளிர் கிடைத்தவுடன் காரின் ஏ.சி.யை அதிக பட்சத்திற்கு செட் செய்யுங்கள். உங்கள் காருக்குள் போதுமான குளிர் கிடத்து விட்டால் வெளியில் உள்ள வெப்பத்தை விட உங்கள் காருக்குள் இருக்கும் வெப்பம் குறைவாக இருக்கும்.
அப்பொழுது தான் ஏசி குளிர்விக்க கூடிய காற்று ஏற்கனவே குளிர்ச்சியாக இருக்கும் ஏ.சி.யும் அதை விரைவாக குளிர்வித்து அனுப்பும், நீங்களும் நீண்ட நேரம் இந்த குளிரை அனுபவிக்க முடியும்.
Recent Comments