ஒரு முன் ஜென்ம கதை…

ஒரு காட்டில சிங்க ராஜாவின் ஆட்சியில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையா வசித்து வந்துச்சாம். தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை இருந்ததால மிருகங்களெல்லாம் சலிச்சுப் போய் ஒரு விரக்க்தியுடன் இருந்துச்சாம். இதைக் கவனிச்ச சிங்க ராஜா, எல்லா மிருகங்களும் சந்தோசமாக வாழ என்ன வழி செய்யலாம் என யோசிச்சு, அனைத்து மிருகங்களையும் ஒன்றா கூட்டிச்சாம்.
மிருகங்களைப் பார்த்து சிங்கம், எனதருமை சகோதரர்களே, இன்று முதல் நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . அது மட்டுமில்ல மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்டில இருக்கலாம். அதுக்கு ஆரம்பமாக இன்று ஒவ்வொரு மிருகங்களும் தனக்குத் தெரிந்த நல்ல ஜோக் ஒன்று சொல்ல வேண்டும். ஆனா, நீங்க சொல்லும் ஜோக்குக்கு யாராவது ஒரு மிருகமாவது சிரிக்காம இருந்தா ஜோக் சொன்ன மிருகத்தை நான் அடிச்சு சாகக் கொன்று விடுவேன். எனவே ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்லுங்க என்று சொல்லிச்சு.
முதல்ல குரங்கை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. பயந்து கொண்டே வந்த குரங்கு மிகவும் அருமையான ஜோக் சொல்லிச்சு. எல்லா மிருகங்களும் விழுந்து விழுந்து சிரித்தன.சிங்கமும் சிரிச்சுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஆமை மட்டும் சிரிக்காம் உம்முனு இருந்திச்சு. என்ன செய்யிறது. ஒரு மிருகம் சிரிக்காதபடியால, சிங்கம் குரங்கை அடிச்சுகொன்னுடிச்சு.
பின்னர் கரடியை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. கரடியும் வந்து குரங்கைவிட நல்ல ஜோக் ஒன்று சொல்லிச்சு. அதுக்கும் சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் சிரிக்க ஆமை மட்டும், ஊகூம்…… சிரிக்கவேயில்லை. கரடியும் செத்திச்சு. அடுத்தது யானை, அதுக்கும் அப்பிடியே நடந்துது.ஆமை சிரிக்கவேயில்லை யானையையும் சிங்கம் அடிச்சு கொன்டுடிச்சு
.
பிறகு கழுதை வந்திச்சு, வந்து “ஒரு ஊரில …” என்று ஜோக் சொல்ல ஆரம்பிக்கு முன்னரே ஆமை விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிச்சு.சிங்கத்துக்கும் மத்த எல்லா மிருகங்களுக்கும் ஆச்சரியமும் கோவமும் வந்திச்சு.
சிங்கம் ஆமையிடம் கேட்டிச்சு, ” இவ்வளவு நேரமும் சிரிக்காம இருந்திட்டு, இப்ப கழுதை ஜோக் சொல்லவே ஆரம்பிக்க இல்ல, ஆனா நீ இப்படி விழுந்து, விழுந்து சிரிக்கிறியே”.
அதுக்கு ஆமை சொல்லிச்சாம்,
“இல்ல குரங்கு சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வந்திச்சு, அதுதான் சிரிச்சேன்.
Recent Comments