அந்தணர் என்பவர் யார்?

பிராம்மணர் என்பது இப்பொழுது சாதியாகி விட்டது. ஆனால், முன்பு பிராம்மணர் என்பதும் அந்தணர் . நன்னடத்தையோடு வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர் பிராம்மணர் ஆவர்.
மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்ப்ட்டது. இப்பாடலின் பொருள்:
“அந்தணர் அறம் செய்யச்சொல்லும் நான்மறை ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர்.”
திருக்குறளில் அந்தணர் எனும் சொல் மூன்று குறள்களில் காணப்படுகிறது.
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.”
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அந்தணர்
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
அறுதொழிலோர் யார்?
ஆறு தொழில்களை உடையவர்கள் யார்?.
அந்தணர்களுக்கு ஆறு தொழில்கள் உள்ளன.
மறைகளை ஓதுதல்
மறைகளைக் கற்று தருதல்
யாகங்களை நடத்துதல்
யாகங்களைக் கற்று தருதல்
அறவழியில் நடத்தல்
அறவழியைக் கற்று தருதல்.
யாகம் ,வேள்வி, ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் .யாகம்என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின்அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாககருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாககருதப்படுகிறது.வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும்அழைக்கப்பெறுகிறது.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் யாகம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவைபின்வருமாறு…
“ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்”
“வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்”
“நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்”
“நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்”
அகத்தியர்
“நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே”
புலிப்பாணிச் சித்தர் –
“கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே”
இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு…
ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமய மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும்.
புறநானூற்றில் யாகம்–
பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார்.
பார்ப்பான், அந்தணர், அந்தணாளர் முதலான சொற்கள் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிறப்பால் யாரும் அந்தணர் ஆக முடியாது மாறாக நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்தணர்கள்.
களவு தொழில் செய்து வந்த வால்மீகி மனம் திருந்தி, ந்ல்லொழுக்கத்தைப் பேணி இராமயணம் இயற்றி நல்லறிவைப் புகட்டினார். எனவே, அவர் பிராம்மணர் ஆகினார். (பிறக்கும் போது வால்மீகி மனிதராகப் பிறந்தார், சூழ்நிலையால் கள்வர் ஆனார். எனினும், முறையான வழிகாட்டுதலுக்குப் பின்னர் மனம் திருந்து நல்லோர் ஆனார்)
பொய்யாமொழி வள்ளுவர் கூறியது போல பிறக்கும் போதே யாவரும் சமமாகவே பிறக்கிறோம். செய்யும் தொழிலே நமக்குள் வேறுபாடுகள் காட்டுகின்றன. அதுபோல தான் அந்தணரும், எல்லாரையும் போல இரு கண்கள் இரு கைகள் இரு கால்கள் ஒரு வாய் என்று மனிதராய் பிறப்பவர்கள், நல்லொழுக்கத்தைப் போற்றியும் புகட்டியும் வாழ்ந்தால் அந்தணர் எனப்படுவர்.
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”
“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.”
நான்மறைகள் என்பன அறம் முதலிய நாற்பொருள் களையும் பொதுப்படக் கூறுவன. சைவநெறி என்பது வீட்டு நெறியை அடைதற்குரிய புற (சரியை), அக (கிரியை), ஒன்றிய (யோக) வழிபாடுகளால் அடையத்தகும் ஞான நெறியைச் சிறப்பாக எடுத்துக் கூறுவது.
: இவ்வுலகில் நான்மறைகளின் நெறிகள் தழைத்து ஓங்கவும், அவற்றுள் மேலாய சைவத் துறைகள் நிலைபெற்று விளங் கவும், உலகுயிர்கள் வழிவழியாகத் தழைத்துச் செழித்து விளங்கவும், தூய திருவாய் மலர்ந்து அழுதவரான, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி, அம்மலரடிகளின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்லுவோம்.
“வாழ்க அந்தணர்; வானவர்; ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே
சூழ்க; வையக முந்துயர் தீர்கவே’’
Recent Comments