மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை.

ஒரு கட்டுமான என்ஜினியர் 13 வது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார். ஒரு முக்கியமான வேலை காரணமாக கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு செய்தி சொல்ல வேண்டும்.
செல்போனில் கொத்தனாரை கூப்பிட்டார் என்ஜினியர்.. கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்டே இருந்தார் போனை எடுக்கவில்லை..
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை. இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்.
என்ஜினியர் என்ன செய்வதென்று யோசித்தார். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்.
ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார். ஆனால், சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை.
என்ஜினியருக்கு ஒரே கோபம்.. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார். அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கொத்தனார் மும்முரமாக வேலை செய்தார்.
என்ஜினியர்.. பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார். அது அவரது தோள் மீது பட்டு வலியை ஏற்படுத்திய போதுதான் அவர் மேலே பார்த்தார்.
அப்பொழுதுதான் என்ஜினியர் தன்னை அழைத்தார் என்பதை கொத்தனார் உணர்ந்தார்.
மனிதனும் அப்படித்தான் மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை. உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்.. அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை..
ஆனால், ஒரு துன்பம் ஏற்படும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான். எனவே துன்பங்கள் வரும் நேரம் இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.
Recent Comments