நாட்களை வீணாக்காதீர்கள்

- யார் உங்களை விட்டுப் போனாலும் வருந்தாதீர்கள் தனிமை உங்களை வரவேற்கும்.
. - எவர் உங்களை வெறுத்தாலும் மனம் உடையாதீர்கள். உங்களை ஒரு உண்மையான இருதயம் நேசிக்கும்.
. - ஏமாற்றியவர்களை நினைத்து நாட்களை வீணாக்காதீர்கள். உங்கள் முயற்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.
.
- அவமானப்படுத்தியவர்களை பழி வாங்க முயற்சிக்காதீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் பலவீனத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
. - பலமுறை தோல்விகளை சந்தித்ததால் உங்கள் இலக்கினை கைவிடாதீர்கள். நீங்கள் நம்பிக்கையோடு இருப்பதே வெற்றிக்கு நிகரானது தான்!
.
- உங்கள் வாழ்க்கையில் நிறைய துரோகிகளை கடந்து விட்டதால் இப்போது உங்களோடு கூட இருக்கும் உறவுகளை சந்தேகப்பட்டு விடாதீர்கள்.
.
- இனியாவது ஒரு நபரை உறவாக ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர் உங்களுக்கு மிகச்சரியானவரா என்று பலமுறை ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.
.
- வாழ்க்கையில் பலரை நேசித்திருப்பீர்கள் பிரிந்து விடுவீர்கள் – ஆனால் பிரிந்த பிறகும் சிலரை நேசிப்பீர்கள். சேர்ந்து வாழ்வதில் மட்டுமே தூய அன்பு நிலைத்திருப்பதில்லை…
.
- உங்களுக்காக எதையும் இழப்பேன் என்று பலர் கூட இருந்திருப்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்ததற்கும் அவர்களே காரணமாகவும் இருந்திருப்பார்கள்.
.
- மனசுக்குப் பிடித்தவர்களோடு பேசும்போது யாரும் விவாதம் செய்து சண்டை போடுவதில்லை… இந்த விட்டுக் கொடுப்பையே புரிந்து கொள்ளாத உறவுகள் பேசும் நியாயம் போலியானது.
.
- விருப்பமானவரோ நெருக்கமானவரோ அவரது தவறை அந்தக் கணத்திலேயே சுட்டிக்காட்டி பேசுங்கள். அது முடியவில்லை என்றால் அவரை விலகி வந்த பின்பு அவரை விமர்சிப்பதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை.
.
- எவ்வளவுதான் பழகினாலும் ஒருவரை இன்னொருவரால் முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களது தேவைகள் பலதரப்பட்டவை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசும் சூழ்நிலை அவர்களுக்கு உருவாகிவிடும்.
.
- அவர் இப்படி இவர் அப்படி என்று எவரையும் கணக்குப் போட்டு நீங்கள் ஏதோ ஒன்றை தீர்மானித்து விடாதீர்கள். சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தங்கள் அவர்களை எவ்வாறு மாற்றும் என்று அவர்களுக்கே தெரியாது.
.
- வேஷம் போடும் மனிதர்களை முதலில் கண்டறியுங்கள். உண்மையான அன்பை அவர்களிடம் நீங்கள் கொடுப்பதும்… அல்லது அவர்களிடமிருந்து அதை நீங்கள் எதிர்பார்ப்பதும் பயனற்றது.
.
- வானவில் அழகாக இருக்கிறதென்று வானத்தை வெறுத்துவிடாதீர்கள். அழகுக்கு ஆயுள் குறைவு!
.
- வலிகளை கொடுபவர்கள் அதைத்தாங்குபவர்களின் நிலையில் இருந்து யோசிப்பதே இல்லை..
.
- விரக்தியோடு சேர்ந்திருந்து சகித்து வாழ்வதை விடவும் நல்ல நினைவுகளை கொண்டு பிரிந்து விடலாம்.
.
- யாரிடமும் எதையும் எதிர்பார்த்து கெஞ்சாதீர்கள் ஏனெனில் உண்மையான நேசம் எதற்கும் மண்டியிட அனுமதிக்காது.
.
- அன்புக்கு அடிமையாக இருக்கலாம் ஆனால் பொய்யான உறவோடு சேர்ந்திருப்பது உயிரோடு இருக்கும்போதே நரகத்தை அனுபவிப்பது போன்றது.
.
- ஒருவரை மறப்பதற்காக வேறொருவரின் அரவணைப்பை தேடி விடாதீர்கள்.பிறகு அதை மறப்பதற்கு இன்னொருவரிடம் ஆறுதலுக்காக கையேந்த வேண்டும்.
.
- காயப்படுத்திய வரை மன்னித்து விட்டு கடந்து செல்லுங்கள். இதுதான் மனவலிமையின் உச்சம்!
.
-
மரணத்தின் பிறகு நாம் எதையும் கொண்டு செல்வதில்லை உயிரோடு இருக்கும் வரை உண்மையான அன்பையும் நியாயமான மனிதத்தையும் ஆவது கொடுத்து விட்டுச் செல்வோம்.
.
- உண்மையானவர்கள் என நினைத்து பொறுமையாயிருந்தேன் – விரோதி ஆனேன்.
.
- இரக்கம் காட்டுவதில் கொடையாளியாகயிருந்தேன் – துன்பத்திற்கு பயனாளி ஆனேன்.
.
- அன்பு செலுத்துவதில் வள்ளலாயிருந்தேன் – கண்ணீருக்கு சொந்தம் ஆனேன்.
.
- தவறு செய்யக் கூடாது என்பதில் மிக கவனமாயிருந்தேன் – ஏமாளி ஆனேன்.
.
- வார்த்தைகள் காயப்படுத்தி விடுமோ என மௌனமாயிருந்தேன் – முட்டாள் ஆனேன்.
.
- கோபம் கொடூரமானது என்று அமைதியாயிருந்தேன் – அடிமை ஆனேன்.
.
- எல்லோரையும் நம்புவதில் நேர்மையாகயிருந்தேன் – வேதனைகளுக்கு நண்பன் ஆனேன்.
.
-
இப்போது தொலைந்து காணாமல் போன என்னை – மற்றவர்களிடத்தில் நானே தேடிக் கொண்டிருக்கிறேன்
.
- சிந்திய கண்ணீருக்கு தெரியாது – மனதில் உள்ள வலிகளை
.
- பேசிய வார்த்தைகளுக்கு புரியாது – உண்டாக்கிய காயங்களை
.
- துரத்தும் நினைவுகள் உணராது – ஏற்படுத்திய தாக்கங்களை
.
- பிரிதல் அறியாது – தவிக்க வைக்கும் தனிமைகளை
.
- இரவுகள் சொல்லாது – தூக்கமில்லாத நாட்களை
.
- புன்னகை காட்டிக் கொடுக்காது – சோகத்தின் ஆழத்தை
.
- இதயம் அழுது சொல்லாது – உள்ளே உடைந்த தருணங்களை
.
- உதடுகளும் யாரிடமும் பேசாது – அனுபவிக்கும் ரணங்களை..
.
- உணர வேண்டியவர்களும் உணர்வதில்லை – உண்மையான உறவின் அர்த்தங்களை ….
.
- வாழ்க்கை முழுமை அடையவில்லை என்று ஏங்காதீர்கள் – தேய்ந்த நிலவுதான் பௌர்னமி ஆகின்றது.
.
- வாழ்க்கையில் அன்பை கொடுத்து ஏமாந்தவர்களை விட அன்பு கிடைக்கிறது என்று நம்பி ஏமாந்தவர்கள்தான் மிக மிக அதிகமானவர்கள்.
.
- கடந்த கால இனிமைகளை நினைத்து நேரத்தை வீணாக்காதே – உன் எதிர் காலம் இறந்து விடும்.
.
- இழப்புகளை கடந்து செல்லு அவற்றை உன் இருதயத்தில் அமர விடாதே
.
- தனிமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதால் மனசு உடைந்து போகாதீர்கள் – உங்களைப் பற்றி அது எவருக்கும் எதையும் சொல்லி சிரிக்கவே சிரிக்காது
.
- எவரையும் நினைத்து அழுது கொண்டே இருக்காதீர்கள் கொஞ்சம் புன்னகைக்க தொடங்குங்கள் தேவையில்லாத ஞாபகங்கள் தானாகவே அழிந்துவிடும்.
.
- சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக எந்தத் தவறையும் செய்து விடாதீர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை விட நிம்மதியே அவசியமானது
.
- நான் அனுபவித்த வலிகளுக்காக கவலைப்படவில்லை நம்பி கை கொடுத்ததற்காக வருந்துகிறேன்.
.
- என்னை ஏமாற்றியவர்களுக்கு நன்றிகள். முயற்சியை நீங்கள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள்.
.
- கண்ணீரை கொடுத்தவர்களை நினைவு கூர்ந்து பாருங்கள் – நிச்சயமாக அவர்கள் உங்களிடம் அன்பை வாங்கி இருப்பார்கள்.
.
- திசை தெரியாமல் கடலில் தத்தளிக்கும் பெரிய கப்பலை ஒரு சிறிய நட்சத்திரத்தால் வழி நடத்த முடியும். அளவுகளை வைத்து எதையும் அளவிடாதீர்கள்.
Recent Comments