உடல் எடைய குறைக்கலேன்னா ரொம்ப சிரமப்படனும்னு

நாராயணசாமி ஒருநாள் காசு போட்டு எடை பார்க்கும் மெசின்ல ஏறி எடை பார்த்தார் மெசின்ல இருந்து இறங்கிய உடனே எடையும் குறிப்பும் அச்சடிக்கப்பட்ட சீட்டு வந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அதில் எடைக்குப் பதில் இப்படி அச்சடிக்கப்பட்டிருந்தது..
ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே ஏறி எடை பார்க்கவும் இருவருக்கு எடை சொல்ல இயலாது.இதைப் பார்த்த நம்ம ஆசாமிக்கு ரொம்ப தர்ம சங்கடமாப் போச்சு. இதற்கு மேல் ஏதாவது செய்து உடல் எடைய குறைக்கலேன்னா ரொம்ப சிரமப்படனும்னு யோசனை செஞ்சார்.
அவருக்கு திடீர்னு கொஞ்ச காலம் அமெரிக்கா போக வாய்ப்பு வந்தது. அங்கே போனவர் ஒருநாள் ஒரு வீதிவழியே நடந்து போய்ட்டிருந்தார். அங்க ஒரு விளம்பரம் தென்பட்டது உங்கள் உடல் எடையைப் பத்து நாளில் குறைக்க வேண்டுமா ..இங்கே வாருங்கள் என்று இருந்தது.
அதுவொரு பெரிய அரங்கம். நம்ம ஆசாமி யோசனை பண்ணிட்டே உள்ளே போனார். அங்கே ஒரு பெண் வரவேற்பாளர் வரவேற்று
என்ன சார் எடையக் குறைக்கணுமானு விபரம் கேட்டுட்டு இங்க ஆர்டினரி ட்ரீட்மெண்ட் 15 நாள்ல குறைச்சுடலாம் அதுக்கு 20 டாலர் கட்டணம், ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்டும் இருக்கு அதுக்கு 50 டாலர்னு சொல்லுச்சு.நம்மாளு யோசனை பண்ணிட்டு சரி ஆர்டினரியே போதும்னு பணத்தைக் கட்டினார்.
சரி சார் அந்த இடது பக்க அரங்கத்துக்கு போங்க சிகிச்சை ஆரம்பம்னு சொல்லி கதவைத் திறந்து நம்மாளை உள்ளே விட்டுக் கதவை சாத்திட்டு வரவேற்பாளர் போயிடுச்சு.அங்க பார்த்தா உள்ளே மேஜை நாற்காலி எல்லாம் கண்ணாபிண்ணானு ஒரு ஒழுங்கில்லாம சிதறிக் கிடக்கு. உள்ளே ஒரு 20 வயசு இளம்பெண் மட்டும் ஒரு மூலைல கவர்ச்சியா நின்னுட்டிருக்கு. நம்மாளுக்கு அந்தப் புள்ளைய பார்த்தவுடனே எப்படியாவது புடிச்சு முத்தம் கொடுத்துடனும்னு அந்தப் புள்ளையப் பார்த்து ஓடுறான். அது இவனுக்கு சிக்காம களைந்து கிடந்த மேஜை நாற்காலிக்கு இடையே புகுந்து ஓடுது. இவனும் பின்னாடியே துரத்துறான். இப்படியே அரை மணி நேரம் போச்சு பிடிக்கவே முடியல. நம்மாளு வேர்த்து களைச்சுப் போயிட்டான்,
வரவேற்பாளரும் வந்து கதவைத் திறந்து இன்னைக்குப் போதும் இவ்வளவு தான் சார் ட்ரீட்மெண்ட். மீண்டும் இதே நேரம் நாளைக்கு வாங்க இப்படித் தான் 15 நாளுக்கும்னு சொல்லிடுச்சு.
நம்மாளு ஆர்டினரியே இப்படினா ஸ்பெசல் எப்படி இருக்கும் அதையும் பாத்துடலாம் இதுக்காக இன்னொரு தடவை அமெரிக்காவுக்கு வரவா முடியும்னு வரவேற்பாளர் கிட்ட போய் நான் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்டும் எடுக்கணும்னு சொன்னார்.
சரி அதுக்கு 50 டாலர் கட்டிட்டு அந்த வலது பக்க அரங்கத்துக்குள்ள போங்கனு சொல்லிட்டு இவனை உள்ளே விட்டு கதவை சாத்திட்டு போயிடுச்சு.
அங்கயும் அதேபோல மேஜை நாற்காலி எல்லாம் ஒழுங்கில்லாம சிதறிக் கிடக்கு உள்ளே பார்த்தா ஒரு மூலைல 70 வயசு பாட்டி ஒன்னு நின்னுட்டிருக்கு. அந்தப் பாட்டி இவனைப் புடிச்சு எப்படியாவது முத்தம் கொடுக்கணூம்னு துரத்த ஆரம்பிச்சுட்டுது. நம்மாளு தப்பிச்சா போதும்னு சிக்காம ஓடுறான். பாட்டியும் விடாம துரத்துது. இப்படியே ஒரு மணி நேரம் போச்சு. வரவேற்பாளர் வந்து கதவைத் திறந்து போதும் சார் இன்னைக்கு, இந்த ட்ரீட்மெண்ட்ல உங்களுக்கு 5 நாள்ல உடம்பு குறைஞ்சிடும். இதுதான் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் போய்ட்டு நாளைக்கு வாங்கனு சொல்லிடுச்சு.
Recent Comments