தேங்காய்ப்பூ ரொட்டி

தேவையான பொருட்கள்
- 1 சுண்டு மா
- 1/3 சுண்டு தேங்காய்பூ (-/+)
- 10 சின்ன வெங்காயம் (-/+)
- 2 பச்சைமிளகாய் (-/+)
- 1/3 சுண்டு இளநீர் / நீர் (-/+)
- உப்பு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்திரத்தில் மா, வெங்காயம், தேங்காய்பூ, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக இளநீர் / நீர் சேர்த்து குழைக்கவும். மாக்கலவை மிருதுவாக மற்றும் கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும். ரொட்டி மாவை மூடி 30 நிமிடங்கள் வைக்கவும்.
ரொட்டி மாவை விரும்பிய எண்ணிக்கையில் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டிய மாவை கொஞ்சம் மாவில் அல்லது எண்ணையில் உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லிய மற்றும் வட்டமாக உருட்டி எடுக்கவும்.
தோசைக்கல் அல்லது நொன்ஸ்ரிக் சட்டியை சூடாக்கி அதில் ரொட்டியை இரு பக்கமும் பொண்ணிறமாகச் சுட்டொடுக்கவும். சுடச்சுட சம்பலுடன் பரிமாறினால் நல்ல சுவையாக இருக்கும். தேங்காய்ப்பூ ரொட்டி தயார்!
குறிப்பு:
ஒன்றுக்கு ஒன்றுக்கு என்ற விகிதத்தில் ஆட்டாமா மற்றும் கோதுமைமா சேர்த்தும் செய்யலாம்.
Recent Comments