ரொட்டி / ஆட்டா மா ரொட்டி:

தேவையான பொருட்கள்:
- 400 கிராம் கோதுமை மா
- 400 கிராம் ஆட்டா மா
- 450 மி.லீ தண்ணீர் (-/+)
- 1/2 மே.க உப்பு
- 1 மே.க சீனி (-/+)
- 5 – 10 மே.க எண்ணை (-/+)
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, ஆட்டா மா, 2 மே.க எண்ணை மற்றும் உப்பை ஒன்றாகக் சேர்த்து கலந்து, சிறிதாக தண்ணீர் விட்டுக் குழைக்கவும். மாக்கலவை சப்பாத்தி மாவை விட இளக்கமாக இருக்க வேண்டும். அதனை குறைந்தது 30 நிமிடங்கள் மூடி விடவும்.
30 நிமிடங்களின் பின்பு அதனை நன்றாக பிசைந்து குழைத்து, சிறிய உருண்டைகளாக்கி, அதனை எண்ணையில் தோய்த்து, அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து 30 நிமிடங்கள் மூடி ஊற விடவும்
30 நிமிடங்களின் பின்பு, எண்ணை பூசிய தட்டில் அல்லது பலகையில் ரொட்டி மாவை வீசவும். அல்லது உருட்டுக் கட்டையால் மெல்லியதாக உருட்டி விரும்பிய வடிவில் செய்யவும். ரொட்டியை பல வடிவங்களில் செய்வார்கள்.
நன்கு சூடான நொன்ஸ்ரிக் சட்டியில் அல்லது தோசைக் கல்லில் ரொட்டியை போட்டு, அடிக்கடி திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.
சுட்டெடுத்த ரொட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடியால் மூடி அல்லது துணியால் மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
ரொட்டியுடன் சம்பல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
தனி கோதுமை மாவில் செய்வதென்றால் 800 கிராம் மா எடுக்கவும், மற்றைய பொருட்களின் அளவு ஒரே அளவு தான்.
Recent Comments